மைத்ரிக்கு MP பதவி : திலங்கவுடன் 'பேரம்' - sonakar.com

Post Top Ad

Friday, 22 November 2019

மைத்ரிக்கு MP பதவி : திலங்கவுடன் 'பேரம்'



முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக்கும் பேரம் நடந்து வருவதாக அறியமுடிகிறது.



இந்நிலையில், அரச நிறுவனம் ஒன்றின் உயர் பதவியைப் பெற்றுக் கொண்டு தனது இடத்தை விட்டுக் கொடுக்க திலங்க சுமதிபால முன் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலகவுடன் பேச்சுவார்த்தை நடந்த போதும் அவர் விட்டுக்கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டதால் திலங்கவுடன் பேரம் நடந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, 2015ல் தேர்தலில் தோல்வியடைந்த பலருக்கு மைத்ரிபால சிறிசேன தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment