
1994ம் ஆண்டு அரசியலுக்குள் நுழைந்த போது இருந்த அதே இடத்துக்கு ஜே.வி.பி திரும்பச் சென்றுள்ளதாக தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி பெற்ற வாக்குகளை முறையாகக் கணிப்பிடின் ஹம்பாந்தோட்டையில் கிடைத்த வாக்குகளைக் கொண்டு எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரையே அக்கட்சி பெற்றுக் கொள்ளும் எனவும் தேசியப்பட்டியல் ஒன்றூடாக இன்னொன்றைப் பெற்றுக் கொண்டாலும் இரண்டு உறுப்பினர்களையே அதிக பட்சமாக பெற்றுக் கொள்ள முடியும் எனவும் கம்மன்பில விளக்கமளித்துள்ளார்.
3 வீதமான தேசிய மட்டத்தில் ஜே.வி.பிக்கு ஆதரவு இருக்கின்ற நிலையில் பொதுத் தேர்தலில் அதன் நிலை ஆரம்பித்த இடத்துக்கே திரும்பச் சென்றுள்ளது என தான் உறுதியாக நம்புவதாக தெரிவிக்கிறார் கம்மன்பில.
No comments:
Post a Comment