ரணில் - மைத்ரி கூட்டரசுக்குப் பெரும் தலையிடியாக இருந்து, அடிக்கடி ராஜித சேனாரத்னவுடன் மோதல்களை உருவாக்கி மருத்துவர்களை வேலை நிறுத்தத்துக்குத் தூண்டுவதில் முக்கிய பங்கு வகித்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்க தலைவர் பாதெனியவுக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் பதவி தரப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டாட்சியில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியான வேலை நிறுத்தங்களை மேற்கொண்டு வந்ததுடன் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது.
இந்நிலையில், குறித்த நபருக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் பதவியை வழங்க ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் பூரண சம்மதம் தெரிவித்துள்ளதாக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment