நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலத்துடன் அரசமைப்பதாக இருந்தால் ஆகக்குறைந்தது ஆறு மாத கால அவகாசத்தின் பின்னரே பொதுத் தேர்தலை நடாத்த முடியும் என்கிறார் பெரமுன தவிசாளர் ஜி.எல். பீரிஸ்.
தற்சமயம் நாடாளுமன்றில் தமக்குப் பெரும்பான்மைப் பலம் இல்லாத நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முழு அதிகாரத்துடன் இயங்க முடியாது எனவும் தெரிவிக்கின்ற அவர் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறும் இலக்கோடு தேர்தலை நடாத்துவதாயின் கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவிக்கிறார்.
இடைக்கால அரசு மார்ச் மாதம் முதல் வாரமளவில் பொதுத் தேர்தலை நடாத்தும் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, முன்னதாக உடனடியாக பொதுத் தேர்தலை நடாத்துமாறு ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment