முஸ்லிம் பெண்கள் வாக்குச் சாவடி வாயில் வரை நிகாப் அணிந்து வருவதில் தடையில்லையெனினும் வாக்குச் சாவடிக்குள் நுழையும் போது தமது முகத்திரையை அகற்ற வேண்டும் என அறிவித்துள்ளது தேர்தல் ஆணைக்குழு.
ஆளடையாளத்தை உறுதி செய்யும் பொருட்டு இது அவசியப்படுவதாகவும் தேசிய அடையாள அட்டையில் காணப்படும் படத்தோடு குறித்த நபர் ஒப்பிடப்படுவதற்கு ஏதுவாக முகத்திரை அகற்றப்பட வேண்டும் எனவும் மஹிந்த தேசப்பிரிய விளக்கமளித்துள்ளார்.
மற்றும் படி அபாயா, புர்கா அணிதல் முஸ்லிம்களின் கலாச்சார உடைகள் என்பதால் அவற்றைத் தடை செய்ய முடியாது என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மேலும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
முஸ்லிம்களே முஸ்லிம்களைக் காட்டிக் ”கெடுப்பர்” என்ற Quote ஒரு முஸ்லிம் அரசியல்ஞானியினால் சில காலத்திற்கு முன்னரே பகிரப்பட்ட விஷயம். முகத்தை மூடியபடி வாக்குச் சாவடிக்குச் செல்லும் முஸ்லிம் பெண்மணி ஒருவர் முதலில் பாதுகாப்பு அலுவலர்களுக்கும் பின்னர் தேர்தல் அலுவலர்களுக்கும் தம்முக அடையாளத்தைக் காட்டுவதில் எந்தக் குளப்பமும் இல்லை. அவர்கள் சாவடியினுள்ளான நடமாட்டத்தினபோது முகம் திறந்துதான் செல்ல வேண்டும் என்பது ஒரு பொது விதியல்ல. தேவைக்கு முகத்தைத் திறப்பதும் தேவை முடிந்தவுடன் மூடுவதும் இவைதான் நியதி. தற்போது கொழும்பு, கண்டி மற்றும் காலி சாலைகளில் முஸ்லிம் பெண்கள் எப்படிச் சென்றாலும் எவரும் அவற்றைப்பற்றி அலட்டிக் கொள்வதே இல்லை. இந்நாட்டில் வம்பர்களும் கடும் வம்பர்களும் ஆங்காங்கே இருப்பதனைத் தவிர்க்க முடியாது.
Post a Comment