சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்ட விவகாரத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு எவ்வித தொடர்புமில்லையென மறுக்கிறது ஸ்ரீலங்கா பொலிஸ்.
முன்னாள் குற்றப்புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் நிசாந்த சில்வா நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தின் பின்னணியில் தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கடத்தப்பட்டு, மிரட்டி விசாரிக்கப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.
எனினும், கடத்தலில் சி.ஐ.டியினர் ஈடுபடவில்லையென பொலிசார் விளக்கமளிக்கின்றனர். இதேவேளை, ஐரோப்பிய நாடொன்றிலிருந்து இலங்கை வந்திருந்த பிறிதொரு நபரும் வெள்ளவத்தையில் வைத்து கடத்தப்பட்டு புத்தளம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment