சபாநாயகர் பதவியிலிருந்து கரு ஜயசூரியவை அகற்றி அதற்குப் பகரமாக வாசுதேச நானாயக்காரவை நியமிப்பதற்கான முயற்றிகளில் பெரமுன தரப்பு ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரு ஜயசூரியவை சபாநாயகர் பதவியிலிருந்த அகற்றி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக்கலாம் என ரணில் எதிர்ப்பு உறுப்பினர்கள் சிலரும் இதில் உடன்பட்டுள்ள நிலையில் இதற்கான முயற்சிகளை பெரமுன செய்து வருவதாக அறியமுடிகிறது.
கோட்டாபே ராஜபக்ச ஜனாதிபதியான போதிலும் பெரமுனவுக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையில்லாத நிலையில் கரு ஜயசூரியவே இராஜினாமா செய்தாலேயே இதற்கான சாத்தியம் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment