முஸ்லிம் பெண்கள் வாக்களிப்பில் கலந்து கொள்வதைத் தடுப்பதற்கான முயற்சியின் பின்னணியில் தாம் வாக்களிக்கச் சென்ற வேளையில் அச்சுறுத்தப்பட்டதாகவும் முகத்திரை, அபாயா போன்ற ஆடைகளை அகற்ற நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் பெண்ணொருவர் பேசுகின்ற போலி வீடியோ ஒன்று முன் கூட்டியே தயாரிக்கப்பட்டுள்ளமை பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
முழுமையாக முகத்தை மூடியிருக்கும் முஸ்லிம் பெண்களை வாக்களிக்கச் செல்ல வேண்டாம் என கோரிக்கை விடுக்கும் வகையில் இக்காணொளி தென் பகுதியில் தயாரிக்கப்பட்டுள்ளதாக சோனகர்.கொம்முக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வாறான முயற்சிகளைப் புறந்தள்ளி, முஸ்லிம்கள் காலையிலேயே தமது வாக்களிப்புக் கடமையினை நிறைவேற்றுமாறு சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைமைகள் வேண்டுகோள் விடுத்துள்ளம குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment