திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய புலனாய்வு அதிகாரி நிசாந்த சில்வா குடும்பத்துடன் வெளிநாடு சென்றுள்ளதைப் பற்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடாத்த வேண்டும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பல முக்கிய கொலை மற்றும் விடுதலைப் புலிகள் சம்பந்தமான வழக்குகளை விசாரித்து வந்த குறித்த நபர், குடும்பத்துடன் வார இறுதியில் சுவிட்சர்லாந்து சென்றுள்ளதாக நம்பப்படுகிறது.
எனினும், இப்பயணத்திற்கான உத்தியோகபூர்வ அனுமதி எதுவும் பெறப்படவில்லையென்பதால் இது சட்டவிரோதம் என தெரிவித்து இது குறித்து விசாரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment