அமைச்சரவையில் உணர்வுபூர்வமாக விடைபெற்ற மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Monday, 11 November 2019

அமைச்சரவையில் உணர்வுபூர்வமாக விடைபெற்ற மைத்ரி!


தன்னோடு இத்தனை காலம் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியென தெரிவித்து தனது தலைமையில் கீழான இறுதி அமைச்சரவைக் கூட்டததில் விடைபெற்றுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.



நவம்பர் 16ம் திகதி ஜனாதிபதி இடம்பெறவுள்ள நிலையில் இன்றைய தினம் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டமே மைத்ரி தலைமையில் இடம்பெற்ற இறுதி அமைச்சரவைக் கூட்டமாகக் கருதப்படுகிறது. 

இக்கூட்டத்தில் மைத்ரி உணர்வுபூர்வமாக விடைபெற்ற அதேவேளை, ஜனநாயகத்தை மீள நிறுவும் போராட்டத்தில் மைத்ரியின் பங்கைப் பாராட்டி ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment