ஜனாதிபதியாவதற்கு முன்னதாகவே கோட்டாபே ராஜபக்சவுக்கு வெளிநாடுகள் அங்கீகாரம் வழங்க ஆரம்பித்து விட்டதாக தெரிவிக்கிறார் தீவிர வெளிநாட்டு எதிர்ப்புவாதியான விமல் வீரவன்ச.
இலங்கை அரசியலின் அனைத்து நகர்வுகளையும் வெளிநாட்டுச் சதியென வர்ணித்து வரக்கூடியவரான விமல் வீரவன்ச, தற்போது தமது தலைவர் சர்வதேச அங்கீகாரம் பெற்றவர் என தமது ஆதரவாளர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதேவேளை, கோட்டாபே ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை பற்றி விமல் வீரவன்ச தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment