முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவார் என தெரிவிக்கிறார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச.
கட்சியின் தலைவராக அவரே தொடர்ந்தும் பணியாற்றுவதோடு தொடர்ந்தும் தனது அரசியல் பணிகளை முன்னெடுப்பார் என பியதாச விளக்கமளித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு கூட்டத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ள அதேவேளை தனது மாவட்ட அபிவிருத்தியில் கவனம் செலுத்தப் போவதாக முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment