தான் அமெரிக்க பிரஜாவுரிமையைக் கை விட்டு விட்டமை உறுதியெனவும், சந்தேகம் உள்ளவர்கள் தேவையென்றால் நீதிமன்றை நாடலாம் எனவும் முதற்தடவையாக தனது இரத்துச் செய்யப்பட்ட அமெரிக்க கடவுச்சீட்டை ஆதாரங்காட்டி கருத்து வெளியிட்டுள்ளார் கோட்டாபே ராஜபக்ச.
அத-தெரண தொலைக் காட்சியில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் அரசியல் நிகழ்ச்சியில் வைத்தே இத் தகவலை வெளியிட்ட அவர், தான் இப்போது இலங்கைப் பிரஜை மாத்திரமே என தெரிவிக்கிறார்.
எனினும், கோட்டாவின் கையில் உள்ள ஆவணங்கள் போலியானவையென தொடர்ந்தும் குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment