தண்டனை பெற்ற யாருக்கும் பொது மன்னிப்பில்லை: சஜித் - sonakar.com

Post Top Ad

Monday, 11 November 2019

தண்டனை பெற்ற யாருக்கும் பொது மன்னிப்பில்லை: சஜித்


கொலையாளிகள், குற்றங்களுக்காக ஏற்கனவே நீதிமன்றில் தண்டனை பெற்ற யாருக்கும் தான் அதிகாரத்துக்கு வந்த பின் பொது மன்னிப்பு வழங்கப் போவதில்லையென தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.


நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்ட ஞானசார மற்றும் ரோயல் பார்க் கொலைக் குற்றவாளிக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியுள்ள நிலையில் ஹிருனிகாவின் தந்தையின் கொலையாளி துமிந்த சில்வாவுக்கும் பொது மன்னிப்பை பெற முயற்சி இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையிலேயே, குருநாகல் - கல்கமுவ பிரச்சாரத்தின் போது சஜித் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment