வேட்பாளரின் குடியுரிமையைப் பரிசோதிப்பது தேர்தல் ஆணைக்குழுவிற்குட்பட்ட கடமையில்லையென விளக்கம் வெளியிட்டுள்ளார் மஹிந்த தேசப்பிரிய.
பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபே ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையைக் கை விட்டு விட்டதாக தெரிவிக்கின்ற போதிலும் உத்தியோகபூர்வ பட்டியலில் அவரது பெயர் இடம்பெறாத நிலையில் இது குறித்த சந்தேகம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், வேட்பு மனுத்தாக்கலின் போது வழங்கப்பட வேண்டிய உறுதிச் சான்றிதழிலிலும் கோட்டா இது குறித்து குறிப்பிடவில்லையெனவும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு எவ்வித ஆவணங்களும் தரப்படவில்லையெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் இது குறித்து கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகிறது.
இப்பின்னணியிலேயே அது தமது கடமையன்று எனவும் தகுந்த வழியில் அதனை உறுதி செய்து கொள்வதற்கு சட்டத்தை அணுக வேண்டும் எனவும் தேசப்பிரிய விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment