ஜனாதிபதி தேர்தலின் போது பரவலாக விதைக்கப்பட்ட வெறுப்பூட்டல் மற்றும் இனவாத பேச்சுக்கள் தொடர்பில் தாம் கவலை கொள்வதாக தெரிவிக்கிறது பொதுலநவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்புக் குழு.
பல்லினங்கள் வாழும் அழகிய தீவொன்றின் எதிர்காலம் வேறு திசையில் சென்று விடுமோ என்ற அச்சம் நிலவுவதாகவும் அதனைக் கவனத்திலெடுத்து ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரு தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட வெறுப்பூட்டும் பேச்சுக்களை முன் வைத்தே இவ்வாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment