ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக பெரமுனவினர் நாட்டில் வன்முறையைத் தூண்டுவதற்கும் குண்டுத் தாக்குதல்களை நடாத்துவதற்கும் திட்டம் தீட்டியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்களில் உண்மையில்லையென கோட்டா தரப்பு மறுப்பு வெளியிட்டுள்ளது.
கோட்டாபே ராஜபக்சவின் ஊடக பிரிவு எனும் கடிதத் தலைப்பில் டலஸ் அழகப்பெருமவின் கையொப்பத்துடன் இக்கடிதம் தேர்தல் ஆணைக்குழு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடும்போக்குவாத முஸ்லிம் விரோத மனப்பான்மையில் இயங்கும் நபர்கள் என அடையாளங்காணப்பட்ட அனைவருமே பெரமுனவில் இணைந்துள்ள நிலையில் தொடர்ச்சியான இனவாத அச்சம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment