நாட்டில் போதைப் பொருளை ஒழிப்பதற்கு மரண தண்டனை மாத்திரம் தீர்வில்லையென தெரிவிக்கிறார் தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க.
நாட்டின் பொருளாதாரம் அதாள பாதாளத்துக்குச் சென்றுள்ள நிலையில் போதைப் பொருள் வர்த்தகம் உச்சத்தை எட்டியுள்ளமை உண்மையாயினும் வெறுமனே மரண தண்டனை மாத்திரம் அதற்குத் தீர்வில்லையென அவர் விளக்கமளித்துள்ளார்.
நாட்டை ஆட்கொண்டுள்ள கடன் தொல்லையிலிருந்து மீட்டெடுப்பதற்கான முறையான பொருளாதாரத் திட்டத்துடனேயே சமூக சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அநுர தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment