ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீனும் புதிய ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஒன்றுபட்ட தேசமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான புதிய வாய்ப்பு கிடைத்திருப்பதாக ஹக்கீம் தெரிவிக்கின்ற அதேவேளை புதிய ஜனாதிபதிக்கும் வாக்காளர்களுக்கும் ரிசாத் நன்றி தெரிவித்துள்ளார்.
வட-கிழக்கில் கோட்டாபே ராஜபக்ச நிராகரிக்கப்பட்டுள்ளமை தேச ஐக்கியத்துக்கான சிறுபான்மை அரசியல் பிரதிநிதிகளின் கூட்டுறவை வலியுறுத்துகின்ற அதேவேளை தற்சமயம் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளினால் சிறுபான்மை தலைவர்களும் தமக்குள் பிரிந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment