ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை வழங்கிய மறு கணமே தனது சுயரூபத்தை காட்ட ஆரம்பித்திருந்தவர் மஹிந்த ராஜபக்ச என தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க.
கட்சித் தலைமைப் பதவியை ஏற்று தலைமையகத்துக்குள் நுழைந்த மறு கணவே அங்கிருந்த முன்னாள் பிரதமர்கள் பண்டாரநாயக்க மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் படங்களை அகற்றச் சொன்ன மஹிந்த புதிய கிளைகளை பதிவு செய்வதையும் நிறுத்தி வைத்து அங்கிருந்தே கட்சியை சிதைக்க ஆரம்பித்திருந்ததாகவும் அதே போன்றே கடந்த காலங்களில் நாட்டையும் திட்டமிட்டுக் கொள்ளையடித்ததாகவும் சந்திரிக்கா மேலும் தெரிவிக்கிறார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் காக்கும் புதிய அமைப்பை வெல்கமவுடன் இணைந்து உருவாக்கியுள்ள சந்திரிக்கா சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கின்றமையும் இதனூடாக சு.க - பெரமுன கூட்டணி எதிர்பார்த்த வாக்குகளைப் பெறமுடியாது எனவும் எதிர்வு கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment