பிரதமர் பதவியைக் கைவிடுவதானால் உடனடியாக பொதுத் தேர்தலை நடாத்த வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க நிபந்தனை விதிப்பதாகவும் அது சாத்தியப்படாது என்பதால் அதனை பெரமுன தரப்பு ஏற்றுக் கொள்ளப் போவதில்லையெனவும் தெரிவிக்கிறார் வாசுதேவ நானாயக்கார.
ஜனாதிபதி தேர்தலை வென்றுள்ள போதிலும் உடனடியாக பொதுத் தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு பெரமுன தயார் நிலையில் இல்லையென தெரிவிக்கின்ற அவர், கோட்டாபே ராஜபக்சவுக்குக் கிடைக்கப் பெற்றிருக்கும் மக்கள் அங்கீகாரத்தைக் கருத்திற்க கொண்டு அரசை ஒப்படைத்து விட்டு ஐக்கிய தேசியக் கட்சி ஒதுங்க வேண்டும் என்கிறார்.
மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றைக் கலைத்து விட்டு தேர்தலை நடாத்துவதே ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் அவர் பதவி விலகப் போவதாகவும் பெரமுன ஆதரவு ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment