பெரோசா முஸம்மில் குழு கோட்டாவுடன் இணைவு - sonakar.com

Post Top Ad

Thursday, 7 November 2019

பெரோசா முஸம்மில் குழு கோட்டாவுடன் இணைவு



கொழும்பில் நீண்ட காலமாக பெரோசா முஸம்மில் அவர்களின் தலைமையில் இயங்கிய ஐ.தே.க பெண்கள் குழு, காந்தா சவிய, இலங்கை பொதுஜன பெரமுனவின்  ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்க்ஷவுக்கு முழு ஆதரவையும் அளிப்போம் என உறுதியளித்தனர் என  இலங்கை பொதுஜன பெரமுன (எஸ்.எல்.பி.பி) முன்னிலையில் கொழும்பு பொது நூலகத்தில்  நடைபெற்ற நிகழ்வில் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.



காந்தா சவிய என்பது அனைத்து மதங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு ஆகும், இது கொழும்பு மற்றும் தலைநகரின் பிற பகுதிகளில் பெண்களின் நலனுக்காக பணியாற்றும் ஒரு அமைப்பாகும்.

கோட்டபய ராஜபக்க்ஷவுக்கு ஒற்றுமையைக் காட்ட பெண்கள் நூற்றுக்கணக்கானோர் இங்கே கூடினர்,  பெரோசா முஸம்மில் தலைமையிலான சிவப்பு (மெரூன்) நிற ஆடை  அணிந்திருந்த ஒரு பெரிய குழு பெண்கள், வரவிருக்கும் தேர்தலில் கோட்டபய ராஜபக்க்ஷவின் வெற்றிக்காக பசில் ராஜபக்ஷ முன் தங்கள்  ஒத்துழைப்பை தெரிவித்தனர்.

-Mohammed Rasooldeen

No comments:

Post a Comment