கொழும்பில் இடம்பெற்ற சஜித் பிரேமதாசவின் முதலாவது பிரச்சாரக் கூட்டத்தில் முஸ்லிம் தலைவர்கள் பேசாமைக்கு தவறான காரணங்கள் கற்பிக்கப்படுவதாகவும் தாம், ஹக்கீம் மற்றும் திகாம்பரம் போன்றோர் தாமாகவே முன் வந்தே தமது உரைகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட்டுக் கொடுத்ததாக தெரிவிக்கிறார் அமைச்சர் ரிசாத் பதியுதீன்.
இதேவேளை நேற்றைய தினம் களுத்துறையில் ஐந்து இடங்களில் சிங்கள மக்கள் மத்தியில் தாம் உரையாற்றியதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிங்கள மக்கள் இனவாதத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதால் அவர்கள் அரவணைப்பதாகவும் ரிசாத் மேலும் விளக்கமளித்துள்ளார்.
எனினும், முஸ்லிம் தலைவர்களின் விட்டுக் கொடுப்பு எதிர்க்கட்சி ஆதரவாளர்களால் தவறான முறையில் பிரச்சாரப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment