தனக்கு வாக்களித்தவர்கள் மாத்திரமன்றி வாக்களிக்காதவர்களுக்கும் தானே ஜனாதிபதியென்பதை தான் அறிவேன் எனவும் அதற்கேற்ப நாட்டை நிர்வகிக்கப் போவதாகவும் தெரிவிக்கிறார் இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகத் தேர்வாகியுள்ள கோட்டாபே ராஜபக்ச.
தனது பிரசசார நடவடிக்கையின் போது யாரையும் தூற்றவோ, சுவரொட்டிகள் மற்றும் பிளாஸ்டிக்குகளை பாவிக்கவோ இல்லையெனவும் புதிய அரசியல் கலாச்சாரம் இலங்கையில் உருவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அனைத்து மக்களுக்குமான ஜனாதிபதியாகத் தம் கடமைகளைத் தொடரப் போவதாக அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment