எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் பிறந்த தினத்தில் இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ளார் அவரது சகோதரன் கோட்டாபே ராஜபக்ச.
அநுராதபுரத்தில் இன்று பதவியேற்ற கோட்டாபே ராஜபக்ச முன்னாள் பாதுகாப்பு செயலாளராகவும் கடமையாற்றியிருந்தவராவார். தான் நாட்டின் அனைத்து மக்களுக்குமான ஜனாதிபதியெனவும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை, தனது கொள்கைகளை நிறைவேற்றும் வகையிலான ஆட்சியை அமைக்கப் போவதாகவும் அவர் வாக்குறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment