ரோயல் பார்க் கொலையாளிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியதைப் போன்று தமக்கும் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி ஆறு மரண தண்டனைக் கைதிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
திங்கள் முதல் இருவர் இவ்வாறு வெலிகடை சிறைச்சாலையில் போராட்டத்தை நடாத்தி வரும் நிலையில் இன்று மேலும் நால்வர் இணைந்து தாமும் விடுவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஞானசாரவுக்கும் பொது மன்னிப்பு வழங்கிய மைத்ரிபால சிறிசேன, திடீரென பிரபல ரோயல் பார்க் கொலையாளியை விடுவித்திருந்ததுடன் அது தொடர்பில் தாம் சிரேஷ்ட நீதிபதிகளுடன் ஆராய்ந்தே முடிவெடுத்ததாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment