மாகந்துரே மதுஷுடன் டுபாயில் கைதாகி நாடு கடத்தப்பட்ட நிலையில் இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட பாதாள உலக பேர்வழி கஞ்சிபானை இம்ரானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து தொலைபேசியூடாக பொலிஸ் அதிகாரியொருவரை மிரட்டியதன் பின்னணியிலான வழக்கிலேயே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
டுபாயில் மதுஷுடன் கைதானவர்களில் கஞ்சிபானை இம்ரானின் விவகாரம் மாத்திரமே தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment