UK, USA என வெளிநாடுகளில் கல்வி கற்ற போதிலும் ஒரு போதும் தனது இலங்கைக் குடியுரிமையை ஒரு போதும் விட்டுக் கொடுத்ததில்லையென தெரிவிக்கிறார் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச.
எந்த வெளிநாடு சென்றாலும் தான் மீண்டும் இலங்கைக்கே வந்து இலங்கையனாகவே வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்த அவர், நவம்பர் 16ம் திகதி உண்மையான இலங்கையனாகத் தான் ஆட்சி பீடமேறவுள்ளதாகவும் நுவரெலியவில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கோட்டாபே ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையைக் கை விட்டதாக வெளியிடப்படும் ஆவணங்கள் எடிட் செய்யப்பட்டிருப்பதாகவும் போலியானவை எனவும் பரவலான குற்றச்சாட்டுகள், கண்டுபிடிப்புகளுடன் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment