சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு உட்கட்சி சூழ்ச்சியே காரணம் என்கிறார் நலின் பண்டார.
பிரச்சாரப் பணிகளுக்கென ஒதுக்கப்பட்ட நிதி கூட முழுமையாகத் தரப்படவில்லையென தெரிவித்துள்ள அவர், கட்சிக்குள் சஜித் பிரேமதாசவை வெல்ல வைப்பதற்கு முழு மனுதுடனான செயற்பாடு இருக்கவில்லைனெவும் தெரிவிக்கிறார். அத்துடன், நாடாளுமன்ற பதவிக் காலம் நிறைவடைய முன்னர் பொதுத் தேர்தலை நடாத்தலாம் என தெரிவிக்கின்றவர்களே அந்த சூழ்ச்சிக்காரர்கள் எனவும் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, மக்களின் ஆணையை கோட்டாபே ராஜபக்ச பெற்றுள்ள நிலையில் அமைச்சுப் பதவிகளில் தொடர்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு எவ்வித உரிமையும் இல்லையெனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment