திம்புலாகல பகுதி விகாரையின் பௌத்த துறவியொருவருக்கு எதிராக மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் பெரமுன முக்கியஸ்தரும் முன்னாள் திம்புலாகல பிரதேச சபையின் தவிசாளருமான ஜகத் சமரவிக்ரம கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவின் பிரச்சாரக் கூட்டத்தில் சர்ச்சை விளைவித்ததன் பின்னணியில் பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவுடன் குறித்த நபரும் கைதாகியிருந்ததுடன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
தற்போது சூரியதேவ ரஜமகா விகாரையின் விகாராதிபதியை அச்சுறுத்தியதன் பின்னணியில் கைதாகியுள்ளமையும் பெரமுனவினர் பெரும்பாலும் விகாரைகளிலேயே தமது அரசியல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமயும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment