ஆளுநர் முசம்மிலை எதிர்க்கும் திட்டமில்லை: ஞானசார - sonakar.com

Post Top Ad

Tuesday, 26 November 2019

ஆளுநர் முசம்மிலை எதிர்க்கும் திட்டமில்லை: ஞானசார


வட மேல் மாகாண ஆளுநராக முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜெ.எம். முசம்மில் நியமிக்கப்பட்டமை தொடர்பில் பிரதேசத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.



எனினும், தமக்கு அதில் எவ்வித ஆட்சேபனையுமில்லையென தெரிவிக்கிறார் ஞானசார.

தமது கடிதத் தலைப்பைப் போலியாக உபயோகித்து, முசம்மிலின் நியமனத்தை எதிர்க்கும் கடிதம் ஒன்று சமூக வலைத்தளத்தில் உலவுவதாகவும் ஆளுநர் அலுவலகத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் செய்யத் தமது அமைப்பு அழைப்பு விடுக்கவில்லையெனவும் ஞானசார மேலும் விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, பிரதேசத்தில் முஸ்லிம் ஆளுநருக்கு எதிரான சுவரொட்டிகள் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment