கண்டி, முஸ்லிம் ஹோட்டல் நிர்வாக குடும்பத்தைச் சேர்ந்த S.D.M. ரபீக் ஹாஜியார் இன்று வபாத்தானர். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ஜனாஸா, நாளை காலை 8 மணி முதல் கட்டுகல பள்ளிவாசலில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு காலை 10 மணியளவில் அடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையிலேயே கண்டி பொது வைத்தியசாலைக்கு ஒரு ஏன்கர் நாற்பது பேர்ச்சஸ் காணியை முஸ்லிம் ஹோட்டல் குடும்பம் நன்கொடையாக வழங்கியிருந்ததுடன் குறித்த வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment