மஹிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமாக நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் முஸ்லிம் அரசியல்வாதிகளைப் புறந்தள்ளி முன்னிலைக்கு வந்த அலி சப்ரிக்கு கட்சி மட்டத்தில் எதிர்ப்பு வலுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு சர்ச்சைப் பேச்சுக்களில் தொடர்புபட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் நடவடிக்கையால் கோட்டாபே ராஜபக்சவின் மதிப்புக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக உட்கட்சியில் கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இதேவேளை, தொடர்ச்சியாக முன்னிலைப் பேச்சாளராக இயங்கி வரும் அவருக்கு தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் என ஆளுனர் முசம்மில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment