ஜனாதிபதி தேர்தலில் தமது வேட்பாளர் தோல்வியடைந்ததையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் பதவி விலகி வரும் தொடர்ச்சியில் கட்சியின் தவிசாளரான கபீர் ஹாஷிம் தனது அமைச்சு மற்றும் கட்சிப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளார்.
இதேவேளை, விரைவில் பொதுத் தேர்தலை நடாத்துவதற்கான முன்னெடுப்புகள் பற்றி ஆராய, கட்சித் தலைவர்கள் மற்றும் சபாநாயகருடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக அறியமுடிகிறது.
கோட்டாபே ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள போதிலும், அவரது வெற்றி நாடு இரு வேறு அபிப்பிராய பிரிவுகளாக மாறியுள்ள சூழ்நிலை உருவாகியுள்ளதாக அரசியல் அவதானிகள் அச்சம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment