சட்டத்தை மதித்துச் செயற்படக்கூடிய ஒரு நபரான தன்னை இனவாதியென அர்த்தம் கற்பிப்பது தவறு என தெரிவிக்கிறார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், இராணுவத்தில் பணியாற்றிய வகையில் ஒழுக்கக் கட்டுப்பாடுள்ள நபராகவே தான் வாழ்ந்து வருவதாகவும் அதற்குத் தவறான அர்த்தம் புனைந்து தன்னை இனவாதியாகவம் கடும்போக்காளராகவும் மக்கள் முன் சித்தரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகங்கள் தன்னைப் பற்றி புனைக்கதைகள் எழுதுவதை விட நேரில் சந்தித்து தமக்குத் தேவையான கேள்விகளை முன் வைத்துத் தன்னை அறிந்து கொள்ளலாம் எனவும் ஜனாதிபதி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment