ஐ.தே.கட்சிக்குள் வலுக்கும் உட்கட்சிப் பூசல்! - sonakar.com

Post Top Ad

Wednesday 20 November 2019

ஐ.தே.கட்சிக்குள் வலுக்கும் உட்கட்சிப் பூசல்!


2015ம் ஆண்டு பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி தேர்தலை வென்ற போதிலும் ஐந்து வருடங்கள் ஆட்சியதிகாரத்தில் இருந்தும் தமது கட்சி வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்றுள்ள நிலையில் கட்சிக்குள் உட்பூசல் வலுத்து வருவதாக அறியமுடிகிறது.



நாட்டின் அரசியலமைப்புக்கு ஏதுவாக விரைவாக நாடாளுமன்ற தேர்தலை நடாத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கே ரணில் விக்கிரமசிங்க ஆயத்தமாக இருந்த போதிலும் திடீரென மங்கள உட்பட ஒரு சிலர் தமது பதவிகளைத் துறந்தமை புதிய சிக்கலை உருவாக்கியுள்ளதாக ரணில் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

கோட்டாபே ராஜபக்ச ஜனாதிபதியாகியுள்ள போதிலும் நான்கரை வருடங்களுக்கு முன்பாக பிரதமரை பதவி நீக்கும் அதிகாரம் அவருக்கு இல்லையென்பது கடந்த வருடம் ஒக்டோபர் அரசியல் பிரளயத்தின் போது நீதிமன்ற தீர்ப்பூடாக நிரூபிக்கப்பட்ட விடயமாகும். எனினும், 52 வீத மக்கள் ஆதரவைப் பெற்ற ஜனாதிபதிக்கு மதிப்பளிக்கும் வகையில் முன் கூட்டியே நாடாளுமன்றைக் கலைப்பதற்குத் தேவையான தீர்மானத்தை நாடாளுமன்றம் ஊடாகப் பெற்று, அதற்கமைவாக நாடாளுமன்றைக் கலைப்பதே திட்டம் என ரணில் தரப்பு மேலும் விளக்கமளித்துள்ளது.

அத்துடன், தற்சமயம் பதவி விலகியவர்கள் காபந்து அரசிலும் தமக்கு பதவிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவ்வாறு செய்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றமையும் ரணில் தலைமைப் பதவியை விட்டு விலக வேண்டும் என்ற குரல் மீளவும் எழுப்பப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment