ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில், அந்த செய்தியாளர் மாநாடு கோட்டாபே ராஜபக்சவுக்கு எதிரானது என பெரமுன தரப்பினர் வெகுவாக தமது பதற்றத்தை வெளியிட்டு வருகின்றனர்.
குறித்த செய்தியாளர் சந்திப்பில் ஈஸ்டர் தாக்குதலுக்கான பின்னணிக்கு கோட்டாபே ராஜபக்சவே பொறுப்பென குறித்த நபர் தெரிவிக்கப் போவதாகவும் அதற்கு அவருக்கு பெருந்தொகைப் பணம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கோட்டா ஆதரவுத் தளங்களில் (සහරාන්ගේ බිරිද කොළඹට ගෙන එයි.. විශාල මුදලක් දෙයි.. ගෝටාට විරුද්ද මාධ්ය හමුව සූදානම්..) செய்தி பரப்பப்பட்டு வருகிறது.
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற மறு தினம் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் நாட்டின் பாதுகாப்பை தன்னால் மாத்திரமே உறுதிப் படுத்த முடியும் எனவும் கோட்டாபே ராஜபக்ச தெரிவித்திருந்தமை பெருமளவு சந்தேகத்தையும் விமர்சனங்களையும் உருவாக்கியிருந்தது. இப்பின்னணியில் தற்போது சஹ்ரானின் மனைவி பேசி விடுவார் என்ற அச்சம் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment