ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நபருக்கு மைத்ரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியமையைக் கேள்விக்குட்படுத்தி உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஞானசாரவுக்கு பொது மன்னிப்பு வழங்கியதன் தொடர்ச்சியில் பிரபல ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற நபருக்கும் ஜனாதிபதி அண்மையில் பொது மன்னிப்பு வழங்கியிருந்தார்.
இந்நிலையிலேயே மைத்ரிவின் முடிவை சவாலுக்குட்படுத்தும் வகையில் இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment