ஜனாதிபதி தேர்தல் தோல்வியையடுத்து ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் பதவி விலகி வரும் தொடர்ச்சியில் ராஜாங்க நிதியமைச்சர் இரான் விக்ரமரத்னவும் இணைந்து கொண்டுள்ளார்.
ஆட்சியதிகாரத்தைக் கைமாற்றுவதில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முழுமையான உடன்பாடு இல்லாத நிலையில் சஜித் ஆதரவு அமைச்சர்கள் முதலில் தமது பதவிகளை துறந்துள்ளதுடன் புதிய ஜனாதிபதி அமைச்சரவையை அமைக்க ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.
எனினும், நாடாளுமன்ற பெரும்பான்மையில்லாத நிலையில் பெரமுனவை ஆட்சியமைக்க அனுமதிப்பதா, இல்லையா? என்ற வாத விவாதம் கட்சி மட்டத்தில் இடம்பெற்று வருவதால் ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் தீர்க்கமான முடிவொன்றை அறிவிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment