இம்முறை ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்கள் இருவரும் தமது வாக்குகளை பதிவு செய்து விட்டு தேர்தல் தின நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரமுன தலைவர் மஹிந்த ராஜபக்ச தனது குடும்ப சகிதம் மெதமுலனவில் வாக்களித்திருந்த அதேவேளை கோட்டாபே ராஜபக்ச நுகேகொடயில் வாக்களித்திருந்தனர். இதேவேளை, சஜித் பிரேமதாச தனது பாரியார் சகிதம் ஹம்பாந்தோட்டையில் தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார்.
இம்முறை தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும் சஜித் - கோட்டா இடையே பலத்த போட்டி எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையான வாக்களிப்பில் பெரும்பாலும் சஜித்துக்கான ஆதரவு தளங்களிலேயே மக்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment