ரத்னபுர, கேகாலை மற்றும் பதுளை மாவட்டத்தில் நிலவும் மோசமான கால நிலை காரணமாக குறித்த மாவட்டங்களின் தேர்தல் முடிவுகள் தாமதமாகும் என தெரிவிக்கிறார் மஹிந்த தேசப்பிரிய.
ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் முடிவுகளுக்காக நாடு காத்திருக்கிறது. இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள தேசப்பிரிய, மழை காரணமாக வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, வாக்குப்பெட்டிகளை கொண்டு சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment