33 கிராம் ஹெரோயினுடன் கைதாகி, நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் தப்பிச் செல்ல முயன்ற நபர் ஒருவர் மீது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது காயமடைந்த நபர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
காலி, பொத்தல பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment