கோட்டாவின் குடியுரிமை: உச்ச நீதிமன்றில் மேன் முறையீடு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 13 November 2019

கோட்டாவின் குடியுரிமை: உச்ச நீதிமன்றில் மேன் முறையீடு!



கோட்டாபே ராஜபக்ச இலங்கைக் குடியுரிமையைப் பெற்ற விதத்தினைக் கேள்விக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரிக்க மறுத்திருந்தமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.



ஒக்டோபர் மாதம் முற்பகுதியில் இவ்வழக்கினை விசாரிப்பது தொடர்பில் மூன்று தினங்கள் தொடர்ச்சியாக ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அதனை ஏற்க மறுத்திருந்தது.

இந்நிலையில், இம்முடிவை சவாலுக்குட்படுத்தி பேராசிரியர் சந்திரகுப்தா தேநுவர மற்றும் காமினி வியங்கொட ஆகிய சமூக ஆர்வலர்கள் இவ்வாறு உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment