ஜனாதிபதியாக பதவிப்பிரமானம் செய்து கொண்ட கோட்டாபே ராஜபக்ச, நாளை முற்பகல் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
P.B. ஜயசுந்தர ஜனாதிபதி செயலாளராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை பாதுகாப்பு செயலாளர் பதவி கமல் குணரத்னவுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் 52 வீத மக்கள் ஆதரவைப் பெற்ற கோட்டாபே இன்று அநுராதபுரத்தில் பதவியேற்றுக்கொண்டதுடன் தான் பெரும்பான்மையின மக்களின் வாக்குகளாலேயே தெரிவாகியுள்ளதாகவும் எனினும் அனைவருக்காகவும் பணியாற்றவுள்ளதாகவும் தனது உரையின் போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment