அமைச்சுப் பதவிகளை ஒரே நபரிடம் ஐந்து வருடஙகளுக்குத் தரும் கலாச்சாரத்தை மாற்றி, இரண்டரை வருடங்கள் என்ற இலக்கை உருவாக்க வேண்டும் என தெரிவிக்கிறார் பந்துல குணவர்தன.
அந்த வகையில் இரண்டரை வருடங்களுக்குள் அந்த அமைச்சுப் பதவியூடாக அவருக்கு வழங்கப்படும் இலக்கை நிறைவேற்றத் தவறினால் குறித்த நபரிடமிருந்து அமைச்சுப் பதவியை மீளப் பெற வேண்டும் எனவும் இந்த நடைமுறையூடாக சிறந்த பெறுபேற்றைக் காண முடியும் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்துள்ள ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச, புதிய அமைச்சரவையையும் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment