ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தகவல் வெளியிட்டு வந்த இணைய செய்தி ஊடகம் ஒன்று பொலிசாரினால் சுற்றி வளைக்கப்பட்டு அதனை நடாத்தி வந்த நபர் சுமார் 8 மணி நேரம் நேற்றைய தினம் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில் கோட்டாவின் பழிவாங்கல் தொடரும் என தெரிவிக்கிறார் மங்கள சமரவீர.
அடுத்ததாக தனது ஊடக இணைப்பாளர் ருவன் இலக்கு வைக்கப்படுவார் எனவும் தெரிவிக்கின்ற மங்கள, கோட்டாபே ஆட்சியில் இவ்வகையான நடவடிக்கைகள் தொடரும் என விளக்கமளித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் பெரமுனவுக்கு எதிராக செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தேடல் நடவடிக்கை இடம்பெற்றிருந்தது. எனினும், ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும் என அமைச்சர் பந்துல நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment