வாழைச்சேனை மதரஸாக்கள் ஒன்றியம் மீலாத் விழாவினை முன்னிட்டு ஏற்பாடு செய்த மீலாத் ஊர்வலம் இன்று ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனையில் இடம்பெற்றது.
வாழைச்சேனை மதரஸாக்கள் ஒன்றியத் தலைவர் எம்.வி.எம்.நவாஸ் தலைமையில் நடைபெற்ற மீலாத் விழா ஊர்வலத்தில் வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள ஆறு குர்ஆன் மதரசாக்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு கசிதாவை பாடினார்கள்.
மீலாத் ஊர்வலமானது வாழைச்சேனை ஜும்ஆ பள்ளிவாயல் முன்பாக ஆரம்பமாகி வாழைச்சேனை ஹைறாத் வீதி, ஓட்டமாவடி, மீராவோடை, செம்மண்ணோடை, பிறைந்துறைச்சேனை பிரதேசங்களுக்கு சென்று பின்னர் வாழைச்சேனை ஹைறாத் பள்ளிவாயலை வந்தடைந்தது.
-M Murshid
No comments:
Post a Comment