இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இராஜாங்க அமைச்சுகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு விருப்பம் இருந்த போதிலும் அது கை கூடாமல் போய் விட்டது என விளக்கமளித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமாக இருந்தால் பல தரப்பட்ட பொறுப்புகள் இருப்பதாகவும் அவற்றை செயற்படுத்துவதற்கு பெருமளவு அமைச்சுக்கள் தேவைப்படுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இன்றைய தினம் 34 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, கபினட் அமைச்சர்கள் 15 பேர் கடந்த வாரம் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும் பல பிரதியமைச்சர்களின் நியமனமும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment