வவுணதீவு பொலிசார் கொலை தொடர்பில் தனக்கு கடந்த வருடமே உளவுத் தகவல் கிடைத்து விட்டதாகவும் அதனை விடுதலைப் புலிகள் செய்யவில்லையென தனக்கு ஏற்கனவே தெரியும் எனவும் தெரிவிக்கிறார் கோட்டாபே ராஜபக்ச.
முன்னதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் கைதான போதும் அது சமய தீவிரவாதிகளின் செயல் என தனக்கு ஏலவே கூறப்பட்டிருந்ததாக அவர் இன்றைய தினம் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் வைத்து தெரிவித்திருந்தார்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னரே வவுணதீவு கொலையும் பயங்கரவாதி சஹ்ரானின் செயல் என விளக்கமளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment