சுதந்திரக் கட்சியிலிருந்து மேலும் பலர் வருவார்கள்: அர்ஜுன - sonakar.com

Post Top Ad

Friday, 1 November 2019

சுதந்திரக் கட்சியிலிருந்து மேலும் பலர் வருவார்கள்: அர்ஜுன


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து மேலும் பலர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து கூட்டணியில் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அர்ஜுன ரணதுங்க.


சந்திரிக்கா தலைமையிலான அணியினர் இன்றைய தினம் ஐக்கிய தேசிய முன்னணியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நிலையில் சுதந்திரக் கட்சியின் மஹிந்த அதிருப்தியாளர்கள் பலரது வருகை எதிர்பார்க்கப்படுகிறது.

சுதந்திரக் கட்சியினர் பெரமுனவுடன் கை கோர்த்துள்ள போதிலும் கட்சித் தலைவர் மைத்ரிபால சிறிசேன தான் தொடர்ந்தும் நடுநிலை வகிக்கப் போவதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment